சிறுநீரக நோய்த்தடுப்பு சனாதிபதி செயலணி

மேன்மைதங்கிய சனாதிபதி அவர்களது “மைத்ரி ஆட்சி… நிலையான நாடு” கொள்கைப்பிரகடனத்தில், இந்நாட்டின் வரட்சி வலய மாவட்டங்கள் பலவற்றில் பேரிடராக வியாபித்துள்ள சிறுநீரக நோய்த்தடுப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்குறியதாக சனாதிபதி அவர்களது ஆலோசனை மற்றும் நேரடிக் கண்காணிப்பின் கீழ் சிறுநீரக நோய்த்தடுப்பு சனாதிபதி செயலணி தாபிக்கப்பட்டுள்ளது. அறிவினைப் பெற்றுக் கொள்ளலும் பரிமாறிக் கொள்ளலும் நுட்பமான (சரியான) முறைகளைக் கையாளல், நோய்த்தடுப்பு, சிகிச்சையளித்தல் மற்றும் பாதிப்பிற்குள்ளானவர்களின் நலன்புரி செயற்பாடுகள், ஒருங்கிணைப்பு செயற்பாட்டினூடாக இடம்பெறுவதனை நோக்கமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் சிறுநீரக நோய்த்தடுப்பு சனாதிபதி செயலணியானது அபிவிருத்தி மற்றும் விசேட கருத்திட்டப் பிரிவின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுவதோடு அதன் கடமைகள் பின்வருமாறு :

  • தேசிய கொள்கைகளையும் திட்டங்களையும் தயாரித்தல்
  • அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்கிடையில் முறையான ஒருங்கிணைப்பு
  • சட்டரீதியானதும் கொள்கைரீதியானதுமான விடயங்களில் மத்தியஸ்தம் செய்தல் (சட்டத்தை சடைமுறைப்படுத்துதல், வரிக் கொள்கை ஆகியன)
  • இலகுபடுத்துநராக செயற்படுதல்
  • நுன்னாய்வு / மேற்பார்வை
  • தொடராய்வு மற்றும் முன்னேற்ற மீளாய்வு

குறிக்கோள்

காலம்கடந்த சிறுநீரக நோயை தொடர்ந்தும் தடுத்தல் மற்றும் சிறுநீரக நோயாளர்களினதும் அவர்களது குடும்ப உறுப்பினர்களினதும் நலன்புரி செயற்பாடுகள்

பணிக்கூற்று

அறிவினைப் பெற்றுக் கொள்ளலும் பரிமாறிக் கொள்ளலும் நுட்பமான (சரியான) முறைகளைக் கையாளல், நோய்த்தடுப்பு, சிகிச்சையளித்தல் மற்றும் பாதிப்பிற்குள்ளானவர்களின் நலன்புரி செயற்பாடுகள், ஒருங்கிணைப்பு செயற்பாட்டினூடாக உறுதிப்படுத்துதல்.